உங்கள் தலையணையால் ஏற்படும் முக்கியமான பிரச்சனைகள்: உடனே மாற்றிவிடுங்கள்
உங்களது உடல் சார்ந்த பிரச்சனைகள் உணவு சார்ந்து ஏற்படுவது மட்டுமல்லாமல், காலத்தை தாண்டிய தலையணையால் கூட ஏற்படலாம். உடல் சம்மந்தமான பிரச்சனைகள் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் சில அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.
இரவு நேரங்களில் நாம் தூங்கும் போது தலையணை வைத்து தூங்கினால் மட்டுமே சிறந்த தூக்கம் பெற முடிகிறது. ஆனால், உங்களுக்கு இந்த பிரச்சனைகள் ஏற்பட்டால், தலையணையை மாற்ற வேண்டும் என்று அர்த்தம்.
தோள்பட்டை இறுக்கம்
உங்களின் தலையணையின் வகையை பொருத்து தோள்பட்டை அல்லது கழுத்து வலி ஏற்படலாம். உங்களுடைய தலையணையின் அளவானது கழுத்து மற்றும் தலையை வைப்பதற்கு வசதியாக இருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் இருந்தால் உங்களுக்கு இந்த பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால், உங்களது தலையணையை மாற்றுவது தான் நல்லது.
முகப்பருக்கள்
குறிப்பாக, உங்களது தலையணை கூட முகப்பருக்கள் வருவதற்கு காரணமாக இருக்கலாம். தலையணை உறை போன்ற சில பொருட்களுடன் உங்களது சருமம் உராய்வை ஏற்படுத்தும் போது முகப்பரு மெக்கானிகா தூண்டப்படுகிறது.
தலையணை உறைகளை சலவை செய்யாமலோ அல்லது மாற்றாமலோ இருந்தால் முகத்தில் உள்ள எண்ணெய்கள் அதிகமாக வெளிப்படும்.
தூக்க சிக்கல்கள்
அசௌகரியமாக நீங்கள் இரவில் உணரும் போது தூக்கத்தில் இருந்து பாதியில் எழுந்திருப்பது உண்டு. ஹார்மோன்களை மறுசீரமைப்பதற்கும், திசுக்களை சரிசெய்வதற்கும், அடுத்த நாளுக்கு புத்துயிர் பெறுவதற்கும் நல்ல தூக்கம் தேவைப்படுகிறது.
நீங்கள் தலையணையை பாதியாக வளைத்து, அது மீண்டும் பழைய நிலைக்கு வரவில்லையென்றால் தலையணையை மாற்ற வேண்டும்.
அலர்ஜிகள்
துவைக்காத தலையணை உறைகளில் கிருமிகள் மற்றும் பூச்சிகள் வருகின்றனர். இதனால், மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம், கண்கள் அரிப்பு போன்ற அலர்ஜிகள் ஏற்படலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |