லண்டனில் நள்ளிரவில் நடுங்க வைத்த சம்பவம்... பொலிஸ் குவிப்பால் தெரியவந்த தகவல்
தென் லண்டனில் மிச்சம் பகுதியில் 20 வயது கடந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
காயமடைந்த நிலையில் இளைஞர்
குறித்த நபர் உயிரிழந்ததைத் தொடர்ந்து கொலைக்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மாநகர பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Image: David Nathan/UKNIP
பெடிங்டன் லேன் சந்திப்புக்கு அருகில் உள்ள குரோய்டன் சாலையில் காயமடைந்த நிலையில் அந்த இளைஞர் கண்டுபிடிக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை 2.25 மணியளவில் குரோய்டன் சாலையில் பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து லண்டன் ஆம்புலன்ஸ் சேவை அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். முதலுதவிக்கு பின்னர், உடனடியாக அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
ஆனால் காயங்கள் காரணமாக அந்த இளைஞரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், குறித்த இளைஞரின் உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கும் பொருட்டு, விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Image: David Nathan/UKNIP
உயிருக்கு போராடியபடி
துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், உயிருக்கு போராடியபடி அந்த இளைஞர் காணப்பட்டதாகவும், சம்பவம் நடந்த பகுதியில் பொலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், குறித்த இளைஞரின் பெயர் உள்ளிட்ட தகவல்களை, உறவினர்கள் அடையாளம் கண்ட பின்னர் மட்டுமே வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.