ஜேர்மனியில் காணாமல்போன குழந்தை வழக்கில் முக்கிய திருப்பம்: ஒரு துயரச் செய்தி
ஜேர்மனியில் காணாமல்போன ஒரு ஆறுவயது சிறுவனை, பொலிசார், ராணுவத்தினர், தீயணைப்புக்குழுவினர், அவசர உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் ஆகியோர் தேடிவருவது குறித்த செய்தியைக் கேள்விப்பட்டிருக்கலாம்.
தற்போது, ஆட்டிஸக்குறைபாடு கொண்ட அந்தக் குழந்தை குறித்த துயரச் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
பிரம்மாண்ட தேடுதல்
வடக்கு ஜேர்மனியிலுள்ள Bremervörde நகரத்தில் வாழ்ந்துவந்த ஆரியன் (Arian) என்னும் ஆறு வயதுச் சிறுவனை, பொலிசார், ராணுவத்தினர், தீயணைப்புக்குழுவினர், அவசர உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் என சுமார் 1,200 பேர் தேடிவந்தார்கள்.
சிக்கல் என்னவென்றால், சாதாரணமாக சிறுவர்கள் யாராவது காணாமல் போனால், அவர்களுடைய பெற்றோரோ அல்லது பொலிசாரோ அவர்களை சத்தமாக அழைத்தால், அந்த சிறுவர்கள் பதிலுக்கு குரல் கொடுக்க வாய்ப்புள்ளது.
Image: Sina Schuldt/dpa/picture alliance
ஆனால், ஆரியன் ஆட்டிஸக்குறைபாடு கொண்ட குழந்தை என்பதால், அவனை அழைத்தாலும் அவனுக்கு பதிலளிக்கத் தெரியாது.
ஆகவே, ட்ரோன்கள், படகுகள், மோப்ப நாய்கள் என பல உதவும் காரணிகளுடன், மீட்புக்குழுவினர் குழந்தையைத் தேடி வந்தார்கள்.
துயரச் செய்தி
ஆனால், தற்போது அந்தக் குழந்தையைக் குறித்த கவலையளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், ஜேர்மனியின் Lower Saxony மாகாண பொலிசார் நேற்று, அதாவது, செவ்வாயன்று, பண்ணை ஒன்றில் ஒரு குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது ஆரியனுடைய உடலாக இருக்கலாம் என தாங்கள் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
Image: Daniel Bockwoldt/dpa/picture alliance
திங்கட்கிழமை மதியம், Behrste என்னுமிடத்தில், விவசாயி ஒருவர் தன் பண்ணையில் புல் வெட்டிக்கொண்டிருக்கும்போது குழந்தையின் உடலைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
அந்த உடல் ஆரியனுடையதுதானா, குழந்தை கொல்லப்பட்டது எப்படி என்பது போன்ற விடயங்களைக் கண்டறியும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |