புலம்பெயர்தல் குறித்து பெரும்பான்மை சுவிஸ் மக்கள் கருத்து இதுதான்...
பெரும்பாலான சுவிஸ் நாட்டவர்கள், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தவே விரும்புகிறார்கள் என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
மூன்றில் இரண்டு பேரின் கருத்து
சுவிஸ் நாட்டவர்களில் சுமார் மூன்றில் இரண்டுபேர், அதாவது, 62 சதவிகிதம் பேர், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்கு ஆதரவாகவே உள்ளார்கள்.
சமீபத்தில் 50,000 சுவிஸ் மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 93 சதவிகித வலதுசாரி ஆதரவாளர்களும், 70 சதவிகித நடுநிலை ஆதரவாளர்களும், 51 சதவிகித இடதுசாரி ஆதரவாளர்களும் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்கு ஆதரவாக உள்ளது தெரியவந்துள்ளது.
Keystone / Laurent Gillieron
குறைந்த அளவு மட்டுமே கல்வி கற்றோருக்குத்தான் புலம்பெயர்தல் குறித்து விளக்கி புரியவைப்பது கடினமாக விடயமாக உள்ளது. ஆனால், பட்டதாரிகளும், நகரங்களில் வாழ்பவர்களும், பெரும்பாலும் புலம்பெயர்தல் குறித்து நேர்மறை எண்ணம் கொண்டவர்களாகவே உள்ளார்கள்.
இருந்தாலும், மொத்ததில் பெரும்பான்மை சுவிஸ் நாட்டவர்களைப் பார்த்தால், அவர்கள் கருத்து புலம்பெயர்தல் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்பதாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.