இந்தியாவுக்கெதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்: ட்ரூடோவை விமர்சிக்கும் கனேடிய ஊடகங்கள்
இந்தியாவுக்கெதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவதாக, கனேடிய ஊடகங்களே கனடா பிரதமர் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
இந்தியாவுக்கெதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவுக்கெதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவதாக கனேடிய ஊடகங்கள் விமர்சனம் முன்வைத்துள்ளன.
காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்திய தூதர்கள் சந்தேக நபர்கள் என கனடா கூறியுள்ளதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் மோசமடைந்துள்ளது.
இந்நிலையில், கனடா பிரதமர் நம்பத்தகுந்த எந்த ஆதாரங்களையுமே முன்வைக்காமல், இந்தியா மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், காலிஸ்தான் அச்சுறுத்தல் தொடர்பில் தவறான தகவல்களை பரப்புவதாகவும் கனேடிய ஊடகங்களும், அரசியல் நிபுணர்களும் விமர்சித்துள்ளார்கள்.
அத்துடன், கனடா பொலிசாரும் எந்த ஆதாரங்களையும் அளிக்காமலே, இந்தியாவுக்கெதிராக மோசமான குற்ரச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் கனேடிய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |