வேல்ஸ், ஸ்காட்லாந்து மக்கள் இங்கிலாந்திற்குள் நுழைவார்கள்! விஞ்ஞானி எச்சரிக்கை
பிரித்தானியாவில் வெவ்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை என பிரைட்டன் பல்கலைக்கழக வைராலஜிஸ்ட் டாக்டர் சாரா பிட் கூறியுள்ளார்.
வேல்ஸ், ஸ்காட்லாந்தில் கொரோனா பரவலை தடுக்க உள்ளூர் அரசாங்கங்கள் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளன.
அதேசமயம், இங்கிலாந்தில் தற்போது வரை அரசாங்கம் எந்தவித கட்டுப்பாடுகளையும் அறிவிக்கவில்லை.
இங்கிலாந்தில் புத்தாண்டிற்கு பிறகே கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என அரசாங்க வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்தள்ளது.
இதுதொடர்பாக டாக்டர் சாரா பிட் கூறியதாவது, வேல்ஸ் அல்லது ஸ்காட்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மக்கள் செல்ல முடியாவிட்டால், அவர்கள் எல்லையை தாண்டி இங்கிலாந்திற்குள் நுழைவார்கள்.
இதனால், அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கும், தொற்றை பரப்புவதற்கும் மற்றும் அவர்கள் ஊருக்கே வைரஸை கொண்டு செல்வதற்கும் சாத்தியம் இருக்கிறது.
எனவே, ஒட்டுமொத்த நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகளை விதிப்பது தான் சரியானதாக இருக்கும்.
தற்போதைய நிலையில் ஒரு சில கட்டுப்பாடுகளை வைத்து வைரஸ் பரவலை தடுக்க முயற்சிப்பது எந்தவித பலனும் அளிக்காது.
ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்து கூடுதலாக சில கட்டுப்பாடுகள் தேவை. ஒமிக்ரான் பாதிப்பால் பலர் மோசமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க நேர்கிறது, சிலர் உயரிழக்கின்றனர்.
நாம் உண்மையில் வைரஸை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், முழு ஊரடங்கு விதிக்க வேண்டும் என நான் கூறவில்லை, இந்த மோசமான மாறுபாட்டை கட்டுப்படுத்த கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என சாரா பிட் கூறியுள்ளார்.