உடலிற்கு சத்தான மக்கானா லட்டு.., எப்படி செய்வது?
மக்கானா என்பது முள் தாமரசெடியின் விதைகளில் இருந்து பெறப்படும் ஒரு சத்தான உலர் கொட்டை ஆகும்.
இது அதிகளவு புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் குறைந்த கலோரியை கொண்ட சிற்றுண்டியாகவும் அறியப்படுகிறது.
தாமரை விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் மக்கானா உடல் எடையைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எலும்புகளை வலிமையாக்கவும் உதவுகிறது.
அந்தவகையில், சத்தான மக்கானவில் லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தாமரை விதைகள்- 100g
- பாதாம்- 100g
- முந்திரி- 100g
- முலாம்பழம் விதைகள்- ¼ கப்
- தேங்காய்- ½ கப்
- வெல்லம்- 200g
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- நெய்- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் நெய் சேர்த்து சூடானதும் தாமரை விதைகளை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதே வாணலில் நெய் சேர்த்து பாதாம், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து வாணலில் நெய் சேர்த்து முலாம்பழம் விதைகள் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவைகள், ஏலக்காய் தூள் மற்றும் வெல்லப்பாகு சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இறுதியாக இதில் நெய் சேர்த்து லட்டுவாக பிடித்தால் சத்தான மக்கானா லட்டு தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |