உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான தாமரை விதை பாயாசம்.., எப்படி செய்வது?
Makhana payasam Recipe In Tamil- தாமரை விதை என்பது முள் தாமரசெடியின் விதைகளில் இருந்து பெறப்படும் ஒரு சத்தான உலர் கொட்டை ஆகும்.
இது அதிகளவு புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் குறைந்த கலோரியை கொண்ட சிற்றுண்டியாகவும் அறியப்படுகிறது.
தாமரை விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் மக்கானா உடல் எடையைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எலும்புகளை வலிமையாக்கவும் உதவுகிறது.
அந்தவகையில், உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான மக்கனா பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மக்கனா- 1 கப்
- பால்- 2 கப்
- குங்குமப்பூ- 5 இதழ்
- சேமியா- ½ கப்
- சர்க்கரை- 3 ஸ்பூன்
- நெய்- 2 ஸ்பூன்
- முந்திரி- 10 ஏலக்காய்- 2
செய்முறை
முதலில் ஒரு வாணலில் மக்கனாவை மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்து அதில் பாதியை மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்துகொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து கொதிக்கவைத்து அதில் வறுத்த மக்கனா மற்றும் சேமியா சேர்த்து கொதிக்கவைக்கவும்.

அடுத்து அதில் சர்க்கரை, அரைத்த மக்கனா பொடி, பாலில் ஊறவைத்த குங்குமப்பூ சேர்த்து கொதிக்கவைக்கவும்.
இறுதியாக இதில் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மக்கானா பாயாசம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |