உலகக்கோப்பையில் வாணவேடிக்கை காட்டிய மலான்! 140 ரன்கள் விளாசி சாதனை
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 369 ஓட்டங்கள் குவித்துள்ளது.
பேர்ஸ்டோவ் அரைசதம்
உலகக்கோப்பை தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதி வருகின்றன.
தரம்சாலாவில் தொடங்கிய இந்தப் போட்டியில் இங்கிலாந்து முதலில் துடுப்பாடியது. 100வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் 59 பந்துகளில் 52 ஓட்டங்கள் எடுத்தார்.
A different kind of ? for Jonny Bairstow!#CWC23 pic.twitter.com/m6Af5NNmEp
— ICC (@ICC) October 10, 2023
அடுத்து தாவித் மலான் - ஜோ ரூட் ஜோடி வங்கதேச பந்துவீச்சை சிதறடித்தது. சிக்ஸர்களை பறக்கவிட்ட மலான் சதம் அடித்தார்.
மலான் சாதனை சதம்
இதன்மூலம் தரம்சாலா மைதானத்தில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை மலான் படைத்தார். மறுமுனையில் பவுண்டரிகளை விரட்டிய ரூட் அரைசதம் கடந்தார். இந்த கூட்டணி 155 ஓட்டங்கள் குவித்தது.
Twitter (@englandcricket)
38வது ஓவரில் மஹெடி ஹசன் இந்த கூட்டணியை பிரித்தார். 107 பந்துகளில் 5 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 140 ஓட்டங்கள் எடுத்திருந்த மலான் போல்டனார்.
பேட்டிங்கின்போது திடீரென விலகிய ஜோ ரூட்! பந்துவீச்சை நிறுத்த முற்பட்டு..தடுமாறி விழுந்து உருண்ட ரஹ்மான்
ஜோ ரூட் 82
அதன் பின்னர் ஜோஸ் பட்லர் 20 ஓட்டங்களில் வெளியேற, ஜோ ரூட் 82 (68) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 400 ஓட்டங்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மஹெடி ஹசன் மற்றும் ஷோரிஃபுல் ஓவரில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் இங்கிலாந்து 369 ஓட்டங்கள் சேர்த்தது.
Twitter (@englandcricket)
வங்கதேச தரப்பில் மஹெடி ஹசன் 4 விக்கெட்டுகளும், ஷோரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் தஸ்கின் அகமது தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |