நாகரீமற்ற கேள்விகளை கேட்கிறார்கள்: தளபதி விஜய் என் நண்பர்..நடிகை மாளவிகா மோகனன்
செய்தியாளர் கேட்ட கேள்வியால் நடிகரை மாளவிகா மோகனன் தனது பதிவில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மாளவிகா மோகனன்
தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். இவர் நடிப்பில் அடுத்ததாக சர்தார் 2 வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மாளவிகா மோகனனிடம் செய்தியாளர்கள் கேள்விகளை கேட்டார்.
அப்போது முதலமைச்சர் விஜய்யை குறிப்பிட்டு செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்க, "என்ன கேள்வி இதெல்லாம்?" என்று மாளவிகா மோகனன் பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து நாகரீகமற்ற கேள்விகளை சிலர் கேட்பதாக மாளவிகா மோகனன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆதங்கம்
அவரது எக்ஸ்தள பதிவில், "நேற்று நான் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டேன். தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துப் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினரின் மீதும் நான் மிகுந்த மரியாதை கொண்டிருந்தாலும், அவர்களில் ஓரிருவர் முற்றிலும் தேவையற்றதும், பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கமுடையதுமான, மிகவும் நாகரிகமற்ற கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர்.
தளபதி விஜய் அவர்களை எனக்குக் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தெரியும்; அவர் மீது நான் மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன்; மேலும், அவரை ஒரு நண்பராகக் கொள்ளும் பாக்கியம் கிடைத்ததற்காக நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவரது திரைப்பயணத்தை உற்றுநோக்குவது, வியக்கத்தக்க ஒரு அனுபவமாகவே இருந்து வருகிறது.
இனிவரும் காலங்களில் ஊடங்களுடனான கலந்துரையாடல்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட அனைவரின் நலன் கருதி, கண்ணியத்துடனும் பரஸ்பர மரியாதையுடனும் அமைந்தால், அதை நான் பெரிதும் வரவேற்பேன்" என தெரிவித்துள்ளார்.
I went for an event yesterday, and while I have the utmost regard for all the journalists and members of the Tamil Nadu media, a couple of them persistently asked some very distasteful questions that were completely unnecessary and sensational.
— Malavika Mohanan (@MalavikaM_) May 16, 2026
Thalapathy Vijay is someone I’ve…

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |