பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அதிர்ச்சியில் திரையுலகம்
பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் உடலநலக்குறைவால் காலமானார்.
நடிகர் ஸ்ரீனிவாசன்
மலையாள சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவராக அறியப்படுபவர் நடிகர் ஸ்ரீனிவாசன்.

69 வயதான இவர், 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், லேசா லேசா படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் கவனத்தை பெற்றிருப்பார்.மேலும், புள்ளக்குட்டிக்காரன் படத்திலும் நடித்திருப்பார்.
நடிகராக மட்டுமின்றி, திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.
மலையாள சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்த இவர், ஒரு தேசிய விருது, 2 ஃபிலிம்பேர் விருதுகள் மற்றும் 6 முறை கேரள அரசு விருதுகளை வென்றுள்ளார்.
காலமானார்
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு, இன்று அதிகாலையில் உதயம்பேரூரில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது உடல்நிலை மோசமானது.

இதனையடுத்து, உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரின் மறைவிற்கு மலையாள திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த ஸ்ரீனிவாசனுக்கு, வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் என இரு மகன்கள் உண்டு.
இருவரும் தந்தையை போல், நடிப்பு, திரைக்கதை, இயக்கம், பட தயாரிப்பு என மலையாள சினிமாவிற்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |