என்னை விஷம் வைத்து கொன்றுவிடுங்கள்..முதல் மனைவி குறித்து தமிழ்ப்பட நடிகர் கண்ணீர் வீடியோ
நடிகர் பாலா முதல் மனைவியால் பிரச்சனை என கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.
முதல் மனைவியுடன் விவாகரத்து
தமிழில் அன்பு, காதல் கிசு கிசு, வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலா. மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர் இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரர் ஆவார்.
2010ஆம் ஆண்டில் அம்ரிதா என்ற பாடகியை திருமணம் செய்த பாலா, 2019யில் அவரை விவாகரத்து மூலம் பிரிந்தார்.
தற்போது கோகிலா என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வரும் பாலா கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.
ரூ.120 கோடி கேட்டு தொந்தரவு
அந்த வீடியோவில் அவர், முதல் மனைவி தற்போது மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக கூறுகிறார்.
'இதை சொல்வதை தவிர வேறு வழி இல்லை. 10 ஆண்டுகளாக வழக்கு வழக்கு என பிரச்சனையை சந்தித்து வருகிறேன். இனியும் இதுபோன்று என் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால், விரைவில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட்டி அனைத்து உண்மைகளையும் ஆதாரங்களுடன் போட்டு உடைத்துவிடுவேன்.
அப்படி என்னிடம் இருந்து உண்மைகள் வெளிவரக்கூடாது என நினைப்பவர்கள் அதற்கு பதிலாக பேருருக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிடலாம்' என பேசியுள்ளார்.
அத்துடன் முன்னாள் மனைவி அம்ரிதா ரூ.120 கோடி பணம் கேட்பதாகவும், தன் கையில் இருந்த ரூ.10 லட்சத்தையும் மகள் பெயரில் வங்கியில் FD செய்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |