பிரபல மலையாள நடிகை மரணம்! திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி
சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த பிரபல மலையாள நடிகை அம்பிகா ராவ் மாரடைப்பால் மரணமடைந்தார்.
மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அம்பிகா ராவ். கொச்சியை சேர்ந்த இவர் பல படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
மீசை மாதவன், தமாஷா, சால்ட் அண்ட் பெப்பர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் பகத் பாசில் நடித்த கும்பலாங்கி நைட்ஸ் படத்தின் மூலம் பிரபலமானார்.
கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனையால் அம்பிகா ராவ் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அம்பிகாவின் உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். இதனை அறிந்த மலையாள திரையுலகினர் அதிர்ச்சியடைந்தனர். அம்பிகா ராவின் மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உங்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டும் அம்பிகா சேச்சி என பிரபல நடிகர் பிருத்விராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதேபோல் நடிகர் குஞ்சக்கோ போபனும், எப்போதும் உங்கள் ஆன்மா நிம்மதியுடன் இருக்க பிரார்த்திக்கிறேன் என இரங்கல் பதிவிட்டுள்ளார்.