மல்லிகைப் பூ கொண்டு சென்ற மலையாள நடிகை: ரூ.1.14 லட்சம் அபாரம் விதித்த விமான நிலையம்: ஏன் தெரியுமா?
பூக்களை கொண்டு சென்றதற்காக மலையாள நடிகை நவ்யா நாயருக்கு மெல்போர்ன் சர்வதேச விமான நிலையம் சுமார் ரூ.1.14 லட்சம்(AUD 1,980) அபராதம் விதித்துள்ளது.
மலையாள நடிகைக்கு அபராதம்
மலையாள நடிகர் நவ்யா நாயர் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மலையாளி சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஓணம் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மெல்போர்னுக்கு பயணம் செய்தார்.
பயணத்திற்கு முன்பாக தந்தை அன்பளிப்பாக வழங்கிய மல்லிகை பூ மாலையில் ஒன்றை கொச்சியிலிருந்து சிங்கப்பூர் வரையிலான பயணத்தின் போது தலையில் அணிந்து கொண்டும், மற்றொன்றை அவரது கைப்பையில் பேக் செய்தும் வைத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் கடுமையான உயிர் பாதுகாப்பு சட்டங்களை கொண்டிருக்கும் நிலையில், மல்லிகைப் பூவை எடுத்து செல்வது சட்ட விதி மீறலாகும்.
இதையடுத்து, மெல்போர்ன் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் நவ்யா நாயருக்கு சுமார் ரூ.1.14 லட்சம்(AUD 1,980) அபராதம் விதித்துள்ளனர்.
உற்சாகம் குறையாத நடிகை
மல்லிகைப் பூ பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்ட பிறகும், நடிகை நவ்யா நாயரின் உற்சாகம் குறையவில்லை.
அவர் தான் கலந்து கொண்ட ஓணம் கொண்டாட்டத்தின் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |