மலேசிய பொலிஸ் அடிச்சாங்களா? அத்தனையும் பொய்.. பிக் பாஸ் நாடியாவிற்கு எதிராக குரல் கொடுத்த மலேசிய தமிழர்!
பிக் பாஸ் நாடியா சங்குக்கு எதிராக மலேசிய தமிழர் பேசிய பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி பயங்கர விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. போட்டி தொடங்கி 12 நாட்களே ஆகி இருந்தாலும் பல சுவாரசிய திருப்பங்களுடன் நிகழ்ச்சி அரங்கேறி வருகிறது.
ஆனால் நிகழ்ச்சி தொடங்கி முதல் வார முடிவில் நமீதா மாரிமுத்துவை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபட்டது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இந்நிலையில் போட்டியாளர்கள் கடந்து வந்த பாதையை குறித்து சுவாரஸ்யமாக பகிர்ந்து வருகின்றனர்.
அதில் மலேசியாவை சேர்ந்த நதியா சங் கூறிய கதை அனைவரையும் சோகத்தில் மூழ்கியுள்ளது. ஆனால் நதியா சிங் கூறிய கதை அனைத்தும் பொய் என்று மலேசிய தமிழர் பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, எங்களை பார்த்தால் எப்படி தெரியுது? என்ன சொன்னாலும் நம்புவாங்கன்னு நினைப்பா.. டிவிக்காக என்ன வேண்டுமானாலும் பேசுவீங்களா. இதில் மலேசிய போலீசை வேறு அசிங்கப்படுத்தி இருக்கீங்க.
18 வயதுக்கு கீழ் எங்கேயும் வேலை கொடுக்கமாட்டார்கள். அப்படி இருக்கும் பொழுது எப்படி ஹோட்டலில் வேலை செய்தீர்கள்? இந்திய போட்டியாளர்கள் யாரும் தங்களின் பெற்றோர்களை விட்டுக் கொடுப்பதில்லை.
பெற்றோர்கள் எப்படி இருந்தாலும் இப்படியா டிவியில் சொல்லி மானத்தை வாங்குவீர்கள் என் கூறியுள்ளார். அதுபோல அவரது கணவர் சீனரோ தமிழ் தெரியாதவரோ இல்லை. என் நண்பருடன் ஒரே பள்ளியில் படித்தவர் தான். நன்றாக சரளமாக தமிழ் பேசுவார்.
அதுவும் செந்தமிழில் பேச தெரிந்தவர். எனக்கு தெரிந்த வரை அவங்க அம்மாவும், அப்பாவும் ரொம்ப தங்கமானவங்க. ஒரு போட்டிக்காக எவ்வளவு கேவலமாக போறீங்க.
வெளியே வாங்க.. காப்போடு மலேசிய பொலிஸ் காத்திருக்கிறார்கள் என பேசி உள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.