மலேசியத் தமிழ்ப்பெண் முதல் பாகிஸ்தானிய பெண்கள் வரை... பிரித்தானியாவில் ஒரே ஆண்டில் கொல்லப்பட்ட 118 பெண்கள்
பிரித்தானியாவில், 2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2021ஆம் ஆண்டு மார்ச் வரையிலான ஓராண்டு காலகட்டத்தில், 118 பெண்கள் ஆண்கள் கையால் கொல்லப்பட்டுள்ளார்கள்.
Sarah Everard என்ற இளம்பெண், பொலிசாரான Wayne Couzens என்பவரால், கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி கடத்தப்பட்டு, வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அந்த கொலை தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான Jess Phillips உரையாற்றும்போது, இதுவரை ஆண்களால் கொல்லப்பட்ட 118 பெண்களின் பெயர்களையும் வாசித்துள்ளார்.
அந்த சம்பவத்தால் கவரப்பட்ட பிரித்தானிய ஓவியரான Henny Beaumont என்பவர், அந்த 118 பெண்களையும் ஓவியமாக வரைந்துள்ளார்.
பெண் நீதிக்காக பாடுபடுபவரான Beaumont, அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி திரட்டுவதற்காகவும் அந்த பெண்களை ஓவியங்களாக தீட்டியுள்ளார்.
அந்த பெண்களில் மலேசியத் தமிழர்களான பூர்ணா கமலேஷ்வரி சிவராஜும் ஒருவர். பூர்ணாவையும் அவரது மூன்று வயது மகன் கைலாஷையும் பூர்ணாவின் கணவரான குகராஜ் கொலை செய்தார்.
இதுபோக, Beaumont வரைந்த ஓவியங்களில், பாகிஸ்தான் மருத்துவரான சமான் மீர் சச்சார்வி, அவரது மகள் வியன் மாங்ரியோ மற்றும் ரஞ்சித் கில் ஆகியோருடைய படங்களும் அடக்கம்.