கனடாவில் வீடு ஒன்றில் சோதனை செய்ய சென்ற பொலிசாருக்கு கிடைத்தது என்ன? வெளியான புகைப்படம்
கனடாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 52 கிராம் கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் திகதி Yorkton நகரின் விவசாய அவென்யூவில் உள்ள ஒரு வீட்டுக்கு பொலிசார் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது தோராயமாக 52 கிராம் கொக்கைன் போதைப்பொருளை பொலிசார் கைப்பற்றினார்கள்.
அதாவது, கொக்கைன் போதை பொருளானது 75 பாக்கெட்களில் பிரித்து வைக்கப்பட்டிருந்தது. இதோடு குறிப்பிட்ட அளவிலான பணத்தையும் பொலிசார் கைப்பற்றினர்.
இது தொடர்பாக எட்மண்டனை சேர்ந்த Acol Welid Agor Dau என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட Acol Welid Agor Dau மீது போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.