இவர் ஆணா பெண்ணா என கேள்வி எழுப்பப்பட்ட விளையாட்டு வீராங்கனை: மனித உரிமைகள் நீதிமன்றம் அதிரடி...
பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை ஒருவருடைய மனித உரிமைகள் சுவிட்சர்லாந்தில் மீறப்பட்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
தொடர் வெற்றிகளால் சர்ச்சைக்குள்ளான பெண்
தொடர் வெற்றிகளால் புகழை அடைந்த விளையாட்டு வீரர்கள் பலர் உண்டு. ஆனால், ஒரு பெண் தொடர்ந்து தான் பங்கேற்ற போட்டிகளில் எல்லாம் வெற்றி பெற்றதால் சர்ச்சைக்குள்ளனார்.
தென்னாப்பிரிக்க நாட்டவரான செமன்யா (Mokgadi Caster Semenya 32), இரண்டு ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களையும் மூன்று உலக சாம்பியன்ஷிப் பட்டங்களையும் வென்ற ஓட்டபந்தய வீராங்கனை ஆவார்.
Image: Getty
அவரது தொடர் வெற்றி, முந்தைய போட்டிகளை விட அடுத்தடுத்தடுத்த பொட்டிகளில் மிக சீக்கிரமாக வேகத்தை அதிகரித்துக்கொண்டே சென்றது ஆகிய விடயங்கள், அவர் பெண்ணா இல்லை ஆணா என்னும் கேள்வி எழக் காரணமாக அமைந்தன.
மருத்துவப்பரிசோதனைகள், அவர் உடலில் XY பாலியல் குரோமோசோம்கள் இருப்பதைக் காட்டின. அதாவது, உடல் ரீதியாக, விஞ்ஞான முறைப்படி ஒருவர் பெண் என்றால், அவரது உடலில் XX என்னும் பாலியல் குரோமோசோம்கள்தான் இருக்கும். ஆண் உடலில் XY என்னும் பாலியல் குரோமோசோம்கள் இருக்கும்.
Image: Reuters
அத்துடன், செமன்யா உடலில் ஆண்களுக்கான ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான் அதிகமாக இருந்தது.
ஆகவே, இப்படிப்பட்ட குணங்கள் கொண்டவர்கள் பெண்களுக்கான போட்டிகளில் பங்கேற்கவேண்டுமானால், அவர்கள் தங்கள் உடலில் உள்ள டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் அளவைக் குறைத்துக்கொள்வதற்காக மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும் என விதிகள் கொண்டுவரப்பட்டன.
mirror
நீதிமன்றம் சென்ற செமன்யா
தான் அந்த மருந்துகளை எடுத்துக்கொள்வது தன் உடல்நிலையை பாதிப்பதாகக் கூறி, மருந்து எடுத்துக்கொள்ள மறுப்பு தெரிவித்தார் செமன்யா. ஆகவே சில விளையாட்டுகளில் பங்கேற்க அவர் அனுமதிக்கப்படவில்லை.
அதை எதிர்த்து சுவிட்சர்லாந்திலுள்ள விளையாட்டு வீரர்களுக்கான நடுவர் நீதிமன்றத்தை நாடினார் செமன்யா. அந்த நீதிமன்றம், அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது. அதை எதிர்த்து அவர் சுவிஸ் உச்ச நீதிமன்றம் செல்ல, அந்த நீதிமன்றம், நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதே என கூறிவிட்டது.
Image: Instagram/Caster Semenya
ஆகவே, பிரான்சிலுள்ள மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தை நாடினார் செமன்யா. அந்த நீதிமன்றம், சுவிட்சர்லாந்தில் செமன்யாவின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், இந்த தீர்ப்பு விளையாட்டு வீரர்களிடையே மாறுபட்ட கருத்துக்களை உருவாக்கியுள்ளது. ஆணின் உடல் குணங்கள் கொண்ட ஒருவர் பெண்களுடன் போட்டியிட்டால் எப்படி பெண்கள் போட்டியிடமுடியும் என்னும் ஒரு கேள்வி ஏற்கனவே செமன்யாவால் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஒரு வீராங்கனையால் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Image: Instagram/Caster Semenya
இதில் ஒரு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், தான் ஆணா பெண்ணா என கேள்வி எழுப்பப்பட்டதால் நீதிமன்றம் சென்ற செமன்யா, Violet Raseboya என்னும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார் என்பதுதான்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |