இங்கிலாந்தில் 14 குட்டிகளை ஈன்ற ‘ஆண்’ பாம்பு: ஒரு ஆச்சரிய தகவல்
இங்கிலாந்தில், ஆண் பாம்பு என எண்ணி வளர்க்கப்பட்ட ஒரு பாம்பு, 14 குட்டிகளை ஈன்றுள்ளது, ஆச்சரிய தகவல் என்னவென்றால், 9 ஆண்டுகளாக அந்த பாம்பு துணையில்லாமல் வாழ்ந்துவருகிறது என்பதுதான்.
14 குட்டிகளை ஈன்ற ‘ஆண்’ பாம்பு
இங்கிலாந்திலுள்ள City of Portsmouth College என்னும் கல்லூரியின் விலங்கியல் துறையில், Ronaldo என்று பெயரிடப்பட்ட பாம்பு ஒன்று வளர்க்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் மாணவி ஒருவர் பாம்புகளை பார்வையிடச் சென்றபோது, Ronaldoவின் கூண்டில் குட்டிகள் இருப்பதை கவனித்துள்ளார்.
Image: PA
அவர் பேராசிரியர்களுக்குத் தகவல் கொடுக்க, அவர் கூறியதை நம்பாமல் அவர்கள் வந்து பார்க்க, Ronaldo, 14 குட்டிகளை ஈன்றுள்ளது தெரியவந்தது.
அதாவது, அந்த பாம்பை சோதனை செய்த கால்நடை மருத்துவர், தவறுதலாக அதை ஆண் பாம்பு என்று கூறிவிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
ஒரு ஆச்சரிய தகவல்
Image: PA
விடயம் என்னவென்றால், 9 ஆண்டுகளாக Ronaldo துணையில்லாமல் வாழ்ந்துவருகிறது. அறிவியலில் parthenogenesis என்னும் ஒரு விடயம் உள்ளது.
அதாவது, இனச்சேர்க்கை இல்லாமலே விலங்குகள் இனப்பெருக்கம் செய்வது. கோழிகளில் இந்த விடயம் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், பாம்புகளில் இப்படி ஒரு விடயம் நடந்துள்ளது, இது உலகிலேயே மூன்றாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |