குடிசைப் பகுதியில் இருந்து சர்வதேச சூப்பர் மொடல்: யாரிந்த மலீஷா
குடிசைப்பகுதியில் கடும் வறுமையில் தத்தளித்த மலீஷா கர்வா இன்று, வோக் மற்றும் காஸ்மோபாலிட்டன் போன்ற சர்வதேச கவனம் ஈர்க்கும் இதழ்களின் அட்டைப்படங்களை அலங்கரிக்கும் மொடலாக உயர்ந்துள்ளார்.
ஃபேஷன் துறையில் பிரபலம்
மராட்டிய மாநிலத்தின் குடிசைப்பகுதியைச் செர்ந்த 16 வயது மலீஷா கர்வா தற்பொது ஃபேஷன் துறையில் பிரபலமடைந்து, இந்தியாவில் அழகு தரத்துக்கு ஒரு புதிய முன்மாதிரியை உருவாக்கியுள்ளார்.
பாந்த்ரா பகுதியில் ஒரு தற்காலிக குடிசை வீட்டில், நலிவுற்றோர் பிரிவினராக, உலகின் கவர்ச்சிகளுக்கு தொடர்பே இல்லாதவராக வாழ்ந்து வந்தார் மலிஷா. ஆனால் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ஹாஃப்மேன், மலீஷாவைக் கண்டுபிடித்தபோது அவரது வாழ்க்கையில் ஒரு மாயாஜாலம் நிகழ்ந்தது.
அதன் ஒருபகுதியாக வோக், காஸ்மோபாலிட்டன் போன்ற புகழ்பெற்ற ஃபேஷன் பத்திரிகைகளின் அட்டைகளில் மலீஷா ஜொலித்தார். தொடர்ந்து தோல் பராமரிப்பு பிராண்டான ஃபாரெஸ்ட் எசென்ஷியல்ஸின் விளம்பர மொடலாக மாறினார்.
மட்டுமின்றி, தன் போன்றவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சமூக ஊடகங்களில் தனது பயணத்தைப் பகிர்ந்து வருகிறார். மலீஷாவை 446,000 பேர்கள் பிந்தொடர்கின்றனர். அவரது பதிவுகள் அனைத்தும், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் தொடர்பான கருத்துகளை கொண்டுள்ளது.
தம்மால் மறக்க முடியாது
அழகு என்பது தோலின் நிறத்தால் வரையறுக்கப்படுவது இல்லை. மாறாக, ஒருவரின் உள்ளம் மற்றும் தன்னம்பிக்கையால் வரையறுக்கப்படுகிறது என்கிறார் மலீஷா. சமீபத்தில் தான் குடிசை வீட்டில் இருந்து புதிய வீட்டுக்கு மலீஷா குடும்பம் மாறியுள்ளது.
இனி அவர் மைல்கள் தாண்டி குடிநீருக்காக அலைய வேண்டாம், பொது கழிவறைகளையும் பயன்படுத்த வேண்டாம். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவுகளால் முதல் முறையாக ரூ 35,000 தொகையை சம்பாதித்ததை தம்மால் மறக்க முடியாது என்கிறார் மலீஷா.
தமது குடும்பத்தில் எவருமே இந்த அளவுக்கு பெருந்தொகையை சம்பாதித்ததில்லை என்கிறார் மலீஷா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |