பிரான்சில் மூன்று பெண்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நிகழ்த்திய புலம்பெயர்ந்தோர்
பிரான்சில் மூன்று பெண்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நிகழ்த்திய புலம்பெயர்ந்தோர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்று பெண்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்
நேற்று வெள்ளிக்கிழமை, பாரீஸ் மெட்ரோ நிலையங்களில் மூன்று பெண்கள் கத்திக் குத்து தாக்குதலுக்குள்ளானார்கள்.

நேற்று மாலை மணி 4.15இலிருந்து 4.45க்குள், மூன்று ரயில் நிலையங்களில் மூன்று பெண்கள் கத்தியால் குத்தப்பட்டார்கள்.
தாக்குதல்தாரியின் மொபைலை ட்ராக் செய்த அதிகாரிகள், மாலை மணி 6.55க்கு அவரை கைது செய்துள்ளார்கள்.
தாக்குதல்தாரியை விரைந்து பிடித்த அதிகாரிகளுக்கு பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
தாக்குதல்தாரி மாலி நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், நாடுகடத்தப்பட இருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் தாக்கப்பட்ட மூன்று பெண்களுக்கும் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |