நாடொன்றில் நிலவும் அசாதாரண சூழ்நிலை: பிரான்ஸ் குடிமக்கள் உத்தரவு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மாலியில் பாதுகாப்பு சீர்குலைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாலியில் நிலவும் அசாதாரண சூழ்நிலை
மாலியில் உள்நாட்டு பாதுகாப்பு மிகவும் ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வாரம் அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய ஜமாஅத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால்-முஸ்லிமின் அமைப்பு நடத்திய பயங்கர தாக்குதலில் இந்த அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் சாடியோ காமாரா கொல்லப்பட்டதே மாலியில் பாதுகாப்பு நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது என்பதற்கு சான்று.
பிரான்ஸ் உடனடி உத்தரவு
இந்நிலையில் மாலியில் உள்ள பிரான்ஸ் குடிமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வணிக விமானங்கள் செயல்பாட்டில் இருக்கும் போதே மாலியில் இருந்து பிரான்ஸ் குடிமக்கள் வெளியேறுமாறு பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

உடனடியாக வெளியேற முடியாதவர்கள் பாதுகாப்பாக தங்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், காரணம் எதுவாக இருந்தாலும் மாலிக்கு பயணம் செய்தை உடனடியாக தவிர்க்க வேண்டும் என்றும் பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |