மொத்த தேசமும் உங்கள் பின்னால் இருக்கிறது..தலையை நிமிர்த்துங்கள்..பாகிஸ்தான் வீரர்களுக்கு முன்னாள் வீரர் கூறிய வார்த்தைகள்
தேசம் முழுவதும் உங்கள் பின்னால் இருக்கிறது என மாலிக் தனது அணி வீரர்களுக்கு தெரிவித்துள்ளார்
பாகிஸ்தான் அணி தனது அடுத்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது
பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முன்னாள் வீரர் சோயிப் மாலிக் பதிவிட்டுள்ளார்.
மெல்போர்னில் நடந்த உலகக்கோப்பை தொடர் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியடைந்தது.
இறுதிவரை பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில், இந்திய அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் பாகிஸ்தான் அணி வீரர்கள் வேதனையடைந்தனர்.
முதல் போட்டியிலேயே தோல்வி கண்டது அந்நாட்டு ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் மாலிக் தமது அணி வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், 'உங்கள் தலையை நிமிர்த்தி இருங்கள் வீரர்களே, இது வெறும் தொடரின் ஆரம்பம் தான்.
பெர்த்தில் அடுத்த போட்டியில் கவனம் செலுத்தி மீண்டும் வேகத்தை பெறுவோம்.
எப்பொழுதும் போல் ஒட்டுமொத்த தேசமும் உங்கள் பின்னால் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்' என தெரிவித்துள்ளார்.