பிரித்தானியாவை தாக்க வரும் Malik புயல்! வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவை Malik புயல் தாக்கவிருப்பதால், கனமழை மற்றும் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Met Office நிறுவனம் இந்த வாரத்திற்கான வானிலை தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமைகளின் காலை வேளையில் பயங்கரமான காற்று வீசக்கூடும் என்றும், அதன்காரணமாக வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கும் கீழ் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்காட்லாந்தில் பனிப்பொழி பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்த், வடக்கு இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் நிற புயல் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த Malik புயல் வடகிழக்கு நோக்கி நகர்வதால் சனிக்கிழமைகளில் இப்பகுதிகளில் அதிக காற்று மற்றும் மழைப் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு ஸ்காட்லாந்தில் இந்த புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலால் சாலைகள், ரயில்வே பாதைகள் மற்றும் விமான, கப்பல் போக்குவரத்துகள் போன்றவை பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்தொடர்புகள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் போன்றவையும் தடைப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இப்பகுதிகளுக்கு ஆம்பர் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. டேனிஷ் வானிலை நிறுவனத்தால், Malik என பெயரிடப்பட்ட இந்த புயல் கடற்கரை ஓரங்களில் 80km வேகத்தில் நகரும் என்றும், பின்னர் 60 km வேகத்தில் Denmark நோக்கி நகரும் என்பதால் Denmarkல் பெருத்த சேதத்தை எதிர்பாக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமையன்று Malik புயல் கிழக்கு நோக்கி நகர்வதால் வடக்கு இங்கிலாந்தில் அதிக காற்றும், அதிக மழைப்பொழிவும் இருக்கும் என டேனிஷ் வானிலை நிறுவனத்தின் மூத்த வானிலையாளர் Paul Gunderson தெரிவித்துள்ளார்