என் சிறந்த வழிகாட்டி மஹேலா ஜெயவர்தனேவுக்கு.. லசித் மலிங்கா நெகிழ்ச்சி பதிவு
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேலா ஜெயவர்தனேவுக்கு ட்விட்டரில் மலிங்கா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் மஹேலா ஜெயவர்தனே பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 374 ஓட்டங்கள் குவித்துள்ள ஜெயவர்தனே, டெஸ்ட் மற்றும் ஒருநாள் இரண்டு வகை கிரிக்கெட்டிலும் 11 ஆயிரம் ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளார்.
Photo Credit: R.S. Gopan
இந்த நிலையில் ஜெயவர்தனே தனது 45வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பல ஆண்டுகளாக எனக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்ததற்கு மிக்க நன்றி. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மஹேலா ஜெயவர்தனே ஐயா' என தெரிவித்துள்ளார்.
Many happy returns of the day @MahelaJay aiya ?❤️
— Lasith Malinga (@ninety9sl) May 27, 2022
Thank you so much for being a great mentor to me over the years? pic.twitter.com/9mZdpB5vqQ