மும்பை இந்தியன்ஸிலிருந்து வெளியேறிய மலிங்கா; பயிற்சியாளர் குழு மொத்தமாக மாற்றம்
malinga exit from mumbai indians: 2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பல்வேறு அணிகளும் பயிற்சியாளர் குழுவை மாற்றியமைத்து வருகின்றனர்.
அதேபோல், 5 முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் பயிற்சியாளர் குழுவை முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸிலிருந்து வெளியேறிய மலிங்கா
சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து மஹேலா ஜெயவர்தனே விலகிய நிலையில், அவருக்கு பதிலாக துடுப்பாட்ட பயிற்சியாளராக செயல்பட்டு வந்த கீரோன் பொல்லார்ட் அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

தற்போது, பயிற்சியாளர் குழுவிலிருந்த லசித் மலிங்கா, பராஸ் மம்பிரே மற்றும் கார்ல் ஹாப்கின்சன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மலிங்கா மற்றும் மம்ப்ரே ஆகியோர் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர்களாகவும், ஹாப்கின்சன் பீல்டிங் பயிற்சியாளராகவும் இருந்தனர்.
2008–2017, 2019–2020 காலகட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய மலிங்கா, அதன் பின்னர் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கபட்டார்.

2010 முதல் 2017 வரையிலும் மம்பிரே அணியில் இருந்த நிலையில், இது அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இரண்டாவது முறையாகும்.
"லசித், பாரஸ் மற்றும் கார்ல் ஆகியோர் அணிக்கும் பரந்த MI குடும்பத்திற்கும் ஆற்றிய பங்களிப்புகளுக்காக மும்பை இந்தியன்ஸ் அணி தங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
Mumbai Indians today announced that Lasith Malinga, Paras Mhambrey and Carl Hopkinson will be moving on from their respective roles in the men’s team coaching setup, thanking each of them for their commitment, contribution and service to the franchise. Their commitment, the relationships they have built and the memories they have helped create will always be part of our journey. We wish each of them the very best in their future endeavours. https://t.co/iQhgBABx2W
— Mumbai Indians (@mipaltan) October 29, 2026
அவர்களின் அர்ப்பணிப்பு, அவர்கள் உருவாக்கிய உறவுகள் மற்றும் அவர்கள் உருவாக்க உதவிய நினைவுகள் ஆகியவை எப்போதும் எங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இருக்கும்" என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய பயிற்சியாளர்கள் குறித்த அறிவிப்பை மும்பை இந்தியன்ஸ் வெளியிடவில்லை.