பாகிஸ்தானின் மறுபிரவேசத்தைப் பார்த்து வியந்தேன்! எனது பந்தயம் இந்த அணி மீது தான்.. இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் வீரர்
உலகக்கோப்பை இறுதிப்போட்டி முன்னேறிய பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள் - லசித் மலிங்கா
பாகிஸ்தானை யார் எதிர்கொள்ள போகிறார்கள் என்பதை பார்ப்போம் என லசித் மலிங்கா கூறியுள்ளார்
இரண்டு தோல்விகளுக்கு பின் அரையிறுதியில் வெற்றி பெற்ற பாகிஸ்தானின் ஆட்டத்தைப் பார்த்து வியந்ததாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.
சிட்னியில் நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் தோல்விகளை சந்தித்தபோது, ஏறக்குறைய தொடரை விட்டு அந்த அணி வெளியேறி விட்டதாக பலரும் நினைத்தனர்.
ஆனால், அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் பாகிஸ்தான் நுழைந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா வெகுவாக பாராட்டியுள்ளார்.
Twitter
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், '2022 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி முன்னேறிய பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள். இரண்டு தோல்விகளுக்கு பிறகு என்ன ஒரு மறுபிரவேசம்.
அவர்களின் உலகத்தரம் வாய்ந்த தாக்குதல் பந்துவீச்சை கண்டது அற்புதமாக இருந்தது.
மெல்போர்னில் 13ஆம் திகதி நடக்கும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை யார் எதிர்கொள்ள போகிறார்கள் என்பதை பார்ப்போம். என்னுடைய பந்தயம் இந்தியா மீது தான்' என தெரிவித்துள்ளார்.