எங்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டம்! உலகக்கிண்ண தொடரில் பத்திரனா மிரட்டுவார் - மலிங்கா
மதீஷா பத்திரனாவின் மிரட்டலான பந்துவீச்சு, உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணிக்கு உத்வேகமாக இருக்கும் என லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மதீஷா பத்திரனா (Matheesha Pathirana) 28 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததால் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
Matheesha Pathirana breaks the 6️⃣0️⃣-run stand with his 3rd wicket of the night 👌👌
— IndianPremierLeague (@IPL) April 14, 2024
But Rohit Sharma continuing his good form from the other end 🙌#MI require 75 from 30
Follow the Match ▶ https://t.co/2wfiVhdNSY#TATAIPL | #MIvCSK | @ImRo45 pic.twitter.com/941b8I4j93
இந்த நிலையில் இலங்கை முன்னாள் ஜாம்பவானும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான லசித் மலிங்கா தனது எக்ஸ் பக்கத்தில் பத்திரனாவை வெகுவாக பாராட்டியுள்ளார்.
அவர் தனது பதிவில், ''நேற்று எங்களுக்கு எதிராக அபாரமான ஆட்டத்தினை மதீஷா பத்திரனா வெளிப்படுத்தினாலும், என்னை வெகுவாக கவர்ந்தது. அவர் தனது பந்துவீச்சில் Control, Line மற்றும் Lengthஐ கணிசமாக மேம்படுத்தியுள்ளார்.
அவரது இந்த ஃபார்ம் உலகக்கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணியை நல்லமுறையில் எடுத்துச் செல்லும்'' என தெரிவித்துள்ளார்.
Extremely impressed with @matheesha_81’s performance yesterday, despite doing it against us.
— Lasith Malinga (@malinga_ninety9) April 15, 2024
He has significantly enhanced his control, line, and length.
His form leading into the WC will be pivotal for SL🇱🇰
தனது பந்துவீச்சு ஸ்டைல் மூலம் ஜூனியர் மலிங்கா என்று அழைக்கப்படும் பத்திரனா, இதுவரை 17 போட்டிகளில் 29 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |