ஒரே போட்டியில் இருவரும்? அது முற்றிலும் பைத்தியக்காரத்தனம்! இலங்கை ஜாம்பவான் மலிங்கா
யார்க்கர் பந்துவீசக்கூடிய இரண்டு பந்துவீச்சாளர்கள் ஒரே போட்டியில் இருக்க வேண்டும் என்பது பைத்தியக்காரத்தனம் என இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.
பத்திரனா
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிரட்டலான பந்துவீச்சில் விக்கெட்டுகளை சாய்த்தவர் இலங்கையின் பத்திரனா.
ஜூனியர் மலிங்கா என்று அழைக்கப்படும் இவருக்கு லசித் மலிங்கா பயிற்சி அளித்திருக்கிறார். அதேபோல் கடந்த இரண்டு மாதங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய நுவான் துஷாராவுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.
பத்திரனா, துஷாரா இருவருமே டி20 உலகக்கிண்ண அணியில் இடம்பெற்றுள்ளனர். லசித் மலிங்கா தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே யார்க்கரை தனது Signature பந்துவீச்சாக மாற்றினார்.
யார்க்கர்
தற்போது அவரைப் போலவே யார்க்கர் பந்துவீசக்கூடிய பத்திரனா, துஷாரா குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ''ஒரு நாட்டில் இதுபோன்ற வளங்கள் இருப்பதை நான் பார்ப்பது எனது வாழ்க்கையில் இதுவே முதல் முறை. இலங்கையின் பந்துவீச்சு வரிசை உலகிலேயே சிறந்தது என்று நான் நினைக்கிறேன். 19 வயதிற்குட்பட்டவர்களில் ஒருவர் இப்படி பந்துவீசுவதை நான் பார்த்தேன், அதேபோல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு இளம் பந்துவீச்சாளரும் இருந்தார். மேலும், என்னைப் போன்ற பல பந்துவீச்சாளர்கள் வருவதால், என்னை திட்டுவது கூட வருகிறது'' என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.
''ஆனால், அவர்களுக்கு இந்த அளவில் நன்றாக ஆடும் திறமை இருக்குன்னா, நான் என்ன பண்ண முடியும்? அவர்கள் வந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என் கலையைப் பற்றி எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்பேன்! டி20 வடிவத்தில் நீங்கள் எப்போதும் யார்க்கரைப் பற்றி பேசுகிறீர்கள்.
ஏனென்றால் அது சிக்ஸர்களை விடாமல் தடுக்கும் பந்து. ஒரே போட்டியில் இருவரையும் போல் யார்க்கர்களை வீசக்கூடிய இரண்டு பந்துவீச்சாளர்கள் இருக்க வேண்டும்? அது முற்றிலும் பைத்தியக்காரத்தனம்'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |