இலங்கை அணியுடன் இணைகிறேன்! ஜாம்பவான் மலிங்கா பெரும் உற்சாகம்... ரசிகர்கள் மகிழ்ச்சி
இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜாம்பவான் லசித் மலிங்கா அணி வீரர்களுடன் இணைவது உற்சாகம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் வீரர் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய தொடரில் பங்கேற்க தஷுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி இன்று அந்நாட்டுக்கு புறப்பட்டு சென்றது. இதையடுத்து தானும் அவுஸ்திரேலியாவின் சிட்னிக்கு புறப்பட்டுள்ளதாக மலிங்கா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Off to Sydney?
— Lasith Malinga (@ninety9sl) February 3, 2022
Sri Lanka cricket team is also on the way to Sydney, Australia ?? and I will join them in few hours.
Excited?#AUSvSL pic.twitter.com/4YqOWtQSwz
அந்த பதிவில், இலங்கை வீரர்கள் சிட்னிக்கு கிளம்பி சென்றுள்ள நிலையில் நானும் புறப்பட்டுள்ளேன். அவர்களுடன் சில மணி நேரத்தில் இணைவேன், உற்சாகத்துடன் உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
மலிங்கா பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியில் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ள நிலையில் அவரின் பயிற்சியின் கீழே வீரர்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Sri Lanka National team led by Dasun Shanaka, departed today in the early hours to Australia ?#AUSvSL pic.twitter.com/jeA4iA9ZLZ
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) February 3, 2022