4 பந்துகளில் 4 விக்கெட்களை தொடர்ச்சியாக வீழ்த்தி சாதனை படைத்த இலங்கை ஜாம்பவான் மலிங்கா! ஒரு வைரல் ப்ளாஸ்பேக் வீடியோ
கடந்த 2007ஆம் ஆண்டு இதே நாளில் இலங்கை வீரர் மலிங்கா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட்கள் வீழ்த்தி உலக சாதனை படைத்த நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
2007 ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் திகதி நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டியில் இலங்கை - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் 45வது ஓவரில் தென்னாப்பிரிக்க அணி விளையாடி கொண்டிருந்த போது இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்கா பந்துவீசினார்.
அப்போது தொடர்ந்து நான்கு பந்துகளில் ஷான் பொல்லாக், ஆண்ட்ரூ ஹால், காலீஸ் மற்று நிதினி ஆகிய நான்கு தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை படைத்தார்.
ஆனாலும் இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா தான் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
❌ Shaun Pollock
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 28, 2021
❌ Andrew Hall
❌ Jacques Kallis
❌ Makhaya Ntini
Lasith Malinga's first four-in-four came at the 2007 World Cup #OnThisDay pic.twitter.com/gnrk03l5f2