கர்ப்ப காலத்தில் சம்பாதிக்க ஆரம்பித்த பெண்: தற்போது ரூ.9800 கோடி நிறுவனத்திற்கு சொந்தக்காரி!
பெரிய நிறுவனங்கள் முதல் அதிநவீன துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. ஒரு கர்ப்பமான பெண் வணிகத்தில் வெற்றி பெறுவதற்கு ஒரு உதாரணம் கஜல் அலக்.
யார் இந்த கஜல் அலக் ?
கஜல் ஹரியானாவின் குருகிராமில் இருந்து வந்தவர், நடுத்தர வர்க்கப் பின்னணியில் வளர்ந்த ஒரு பெண். ஹரியானாவில், அவர் தனது முறையான கல்வி மற்றும் குழந்தை பருவ கல்வியை முடித்தார்.
கஜல் 2010 இல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கணினி பயன்பாட்டில் பட்டம் பெற்றார். 2013 இல் நியூயார்க் கலை அகாடமியில் டிசைன் மற்றும் அப்ளைடு ஆர்ட்ஸில் தனது கோடைகால தீவிரப் படிப்பையும் நவீன கலையில் உருவகக் கலையில் படிப்பையும் முடித்தார்.
அவரது தொழில்துறை பயணம் ஒரு கார்ப்பரேட் பயிற்சியாளராக தொடங்கியது. 2008 முதல் 2010 வரை, அவர் NIIT லிமிடெட் நிறுவனத்தில் கார்ப்பரேட் பயிற்சியாளராக பணியாற்றினார்.
இவர் பல்வேறு IT நிபுணர்களுக்கு மென்பொருள் மற்றும் குறியீட்டு மொழிப் பயிற்சியை அளித்தார்.
இதையடுத்து தனது கணவருடன் சேர்ந்து, MamaEarth பொருட்களை அறிமுகப்படுத்தினார். இதில் குழந்தைகளுக்கு மற்றும் தாய்மார்களுக்கு ஏற்றதுப்போல் பலவிதமான பொருட்களை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தினார்.
MamaEarth
கஜல் அவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறக்கிறது. குழந்தையை எப்படி ஆரோக்கியமாக வளர்ப்பது என்ற யோசனையில் இணையத்தில் பல பொருட்களை தேடிப் பார்த்து வாங்க தொடங்கினர். ஆனால் ஒவ்வொரு பொருட்கள் இயற்கையான முறையில் செய்யப்பட்டவை அல்ல.
ஆகவே, சுற்றுச்சூழலுக்கு உகந்த, நச்சுகள் இல்லாத குழந்தைப் பொருட்களை வழங்கும் நோக்கத்துடன், கிரீம்கள், லோஷன்கள், ஷாம்புகள், மசாஜ் எண்ணெய்கள், பாடி வாஷ்கள் மற்றும் டயப்பர்கள் ஆகிய ஆறு பொருட்களை தம்பதியினர் சந்தைக்குக் கொண்டு வந்தனர்.
தொடக்கமானது நிறுவப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு D2C (நேரடி-நுகர்வோருக்கு) நிகழ்வாக மாறியது.
தற்போது, இந்த பிராண்ட் பொது ஆரோக்கியம் மற்றும் அழகு முதல் குழந்தை பராமரிப்பு வரை 500 பொருட்களை விற்பனை செய்கிறது.
Mamaearth ஆசியாவிலேயே தயாரிக்கப்பட்ட பாதுகாப்பான பொருள் என்ற சான்றிதழையும் பெற்றுள்ளது.
இவர் தனது வாழ்க்கை பயணத்தை மிகவும் சுருக்கமாக சமீபத்தில் தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.
ஒரு கார்ப்பரேட் பயிற்சியாளராக தனது முதல் வருமானம் வெறும் ரூ.1,2000, இதை வைத்து அம்மாவை ஷாப்பிங் அழைத்து செல்வேன். மறக்க முடியாதளவிற்கு இரவு வேளையில் உணவுகளை வாங்கி பகிர்ந்துக்கொள்வோம். என அவரது வாழ்க்கைப் பயணத்தை தெரிவித்துள்ளார்.
My first income was modest, earning Rs 1200/day as a weekend corporate trainer.
— Ghazal Alagh (@GhazalAlagh) October 16, 2023
I recall the joy of taking my mom shopping and sharing a memorable dinner.
What about you? How did you use your first earnings?
மேலும், மாதம் ரூ.1200 சம்பாதித்து, கர்ப்பமாக இருந்தபோது நிறுவனத்தையும் தொடங்கி, தற்போது ரூ.9800 கோடி நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |