ஒரே வருடத்தில் 36 படங்களில் நடித்த பிரபல நடிகர்.., யார் தெரியுமா?
விஜய், அஜித், ரஜினி, கமல், மகேஷ் பாபு, ராம் சரண், என பெரும்பாலான தென்னிந்திய மொழி டாப் ஸ்டார் நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்கின்றனர்.
இன்னும் ஒரு சில நடிகர்கள் ஒரு படத்தில் நடிக்க இரண்டு மூன்று வருடங்கள் கூட கஷ்டப்படுகிறார்கள்.
ஆனால் முன்பு, பெரிய நடிகர்கள் எல்லோரும் வருடத்திற்கு குறைந்தது 5 படங்களாவது நடிப்பார்கள்.
ரஜினிகாந்த் , கமல்ஹாசன், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் ஒரு வருடத்திற்கு 10 முதல் 15 படங்களில் கூட நடித்துள்ளனர்.
ஆனால் ஒரே வருடத்தில் 36 படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார் நடிகர் மம்முட்டி.
70 வயதைக் கடந்தும் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
இவரின் இந்த தோற்றத்திற்கு காரணம் எந்நேரமும் ஏதாவது வேலையை செய்து கொண்டு, தன்னையும் - தன்னை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்வது என கூறியுள்ளார்.
மம்முட்டியை தொடர்ந்து, இவருடைய மகன் துல்கர் சல்மானும் தற்போது அடுத்தடுத்து, பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார்.
இன்று மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மம்மூட்டி, 1971ஆம் ஆண்டு அனுபவங்கள் பாலிச்சகல் என்கிற திரைப்படத்தில், சிறிய வேடத்தில் நடிக்க துவங்கனார்.
பின்னர், மிக குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்தவர் என பெயரெடுத்தவர்.
1982ஆம் ஆண்டு 24 படங்களில் நடித்த மம்முட்டி, 1983 முதல் 1986 வரை ஒவ்வொரு வருடமும் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்தார்.
400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் மம்முட்டி 1983ஆம் ஆண்டு 36 படங்களில் நடித்து புதிய சாதனை படைத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |