என்னை மன்னித்து விடுங்கள்.. 21 ஆண்டுகளாக ரகசியத்தை மறைத்த மலையாள சூப்பர் ஸ்டார்! சோகத்தில் ரசிகர்கள்..
மலையாள நடிகர் மம்முட்டி இடது காலில் ஏற்பட்ட தசை முறிவிற்கு அறுவை சிகிச்சை செய்யாமல் 21 ஆண்டுகளாக வலியில் தவித்து வந்துள்ள நிகழ்வு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தற்போது அவரது மகன் துல்கர் சல்மான் தயாரிக்கும் புழு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மம்முட்டி, 21 ஆண்டுகளுக்கு முன் தனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது.
அதில் எனது இடது காலில் தசை சேதமடைந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.
ஆனால் சிகிச்சை செய்து கால் குட்டை ஆகி விட்டால் அனைவரும் கிண்டல் செய்து விடுவார்களோ என்ற பயத்தில் சிகிச்சை செய்யாமலே 21 வருடங்களாக வலியில் தவித்து வருகிறேன்.
காலின் நீளம் குறைந்துவிட்டால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்பதால் சுமார் 21 ஆண்டுகள் அறுவை சிகிச்சையை தள்ளி போட்டு கொண்டு இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை கேட்டதில் இருந்து அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.