பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக் கொலை சம்பவம்: 19 வயது இளைஞர் கைது!
பிரித்தானியாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 சிறுவர்கள் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட சம்பவத்தில், சந்தேகத்தின்பேரில் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் ப்ரென்ட்வுட் நகரத்தில் கிரவுன் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள Regency கோர்ட் குடியிருப்பின் அருகே, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில், இரண்டு 16 வயது சிறுவர்கள் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டுள்ள பொலிஸார், முன்னதாக Grays பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரையும், South Ockendon பகுதியைச் சேர்ந்த 21 வயது நபர் ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
Picture: PA
ஆனால் அவர்கள் இருவருக்கும் இந்த வழக்கில் பெயில் கிடைத்துள்ளது, அவர்கள் வரும் நவம்பர் 19-ஆம் திகதி நிபந்தனையின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர்.
மேலும், ப்ரென்ட்வுட் பகுதியில் இருந்து 40 வயது நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்து, தற்போது விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது போல், மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டு, அதில் 4 பேர் எந்த நிபந்தனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று (புதன்கிழமை) Orsett, Baker Street பகுதியைச் சேர்ந்த Frankie Watson எனும் 19 வயது இளைஞர் இன்று (புதன்கிழமை, அக்டோபர் 27) Southend மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
அவர்மீது 2 கொலை குற்றங்கள், ஒரு கொலை முயற்சி மற்றும் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த குற்றங்களுக்காக வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.