குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற சுவிஸ் நாட்டவருக்கு வெளிநாட்டில் நிகழ்ந்த துயரம்
சுவிஸ் நாட்டவர் ஒருவர் அயர்லாந்தில் வாழ்ந்துவந்த தன் குடும்பத்தினரைக் காணச் சென்ற நிலையில், அவரை அவரது மகனே கொலை செய்த விடயம் இரு நாடுகளிலும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
சுவிஸ் நாட்டவரைக் கொன்ற மகன்
சுவிஸ் குடிமகனான அர்ஸ் (Urz Benz, 62), அயர்லாந்தில் வாழ்ந்துவந்த தன் குடும்பத்தினரை சந்திப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது அர்ஸின் மகனான ஸ்டீபன் (Stephane Benz, 29), தன் தந்தையைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
ஸ்டீபன், அயர்லாந்திலுள்ள Malahide என்னுமிடத்தில் வாழ்ந்துவந்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில் வாழ்ந்து வந்த அர்ஸ், தனது குடும்பத்தினரைக் காண அயரலாந்துக்குச் சென்ற நிலையில், இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது.
சனிக்கிழமை காலை 8.30 மணியளவில், இந்த அதிர்ச்சியை உருவாக்கும் சம்பவம் நிகழ, கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ஞாயிற்றுக்கிழமை டப்ளின் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |