திருமணத்திற்கு பெண் பாருங்கள்.., MLA -விடம் கோரிக்கை வைத்த 44 வயது நபர்
பெட்ரோல் போட வந்த சட்டமன்ற உறுப்பினரிடம் மணப்பெண் பாருங்கள் என்று 44 வயது நபர் ஒருவர் கோரிக்கை வைத்தது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இளைஞர் கோரிக்கை
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், சரகாரி தொகுதியில் எம்.எல்.ஏவாக இருப்பவர் பிரிஜ்பூஷன் ராஜ்புத். இவர், பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போட வந்துள்ளார்.
அப்போது அங்கு பெட்ரோல் பங்க் ஊழியராக பணியாற்றி வரும் 44 வயதான அகிலேந்திர கரே என்பவர் தனக்கு மணப்பெண் கண்டுபிடிக்க உதவுமாறு சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதனை எதிர்பாராத சட்டமன்ற உறுப்பினர் அதனை கேட்டு அதிர்ச்சியடைந்தார். தேர்தலில் ராஜ்புத்திற்கு வாக்களித்ததாகக் கூறிய காரே, அவரின் வெற்றியில் தனக்கு பங்கு இருப்பதாகவும் கூறினார்.
இதனால், அதற்கு கைம்மாறு செய்யும் வகையில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என்று கரே எதிர்பார்க்கிறார்.
இவர்களின் உரையாடல் வீடியோவை சட்டமன்ற உறுப்பினர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |