லண்டனில் பட்டப்பகலில் 7 வயது சிறுமியை கடத்திச்சென்ற நபர்: புகைப்படம் வெளியிட்ட பொலிசார்
தெற்கு லண்டனில் பட்டப்பகலில் 7 வயது சிறுமியை பறித்துக் கொண்டு மாயமான நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்புடைய கண்காணிப்பு கெமரா காட்சிகளை வெளியிட்ட பொலிசார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
Camberwell பகுதியில் மாலை 5 மணிக்கு தாயாருடன் சென்ற சிறுமியையே, குறித்த நபர் கடத்திச் சென்றுள்ளார்.
இருப்பினும் சிறுமியை அந்த நபர் விட்டுவிட்டு மாயமாகியிருந்தாலும், அந்த நபர் தொடர்பிலான விசாரணை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் நடந்த இச்சம்பவம் தொடர்பில், தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாரை அணுக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தகவளிக்கும் நபர்களின் அடையாளங்கள் ரகசியமாக வைக்கப்படும் என குறிப்பிட்டுள்ள பொலிசார், இணைய பக்கம் மூலமாகவும் தகவல் அளிக்கலாம் என கூறியுள்ளனர்.
கருப்பினத்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நபருக்கு 40 வயதிருக்கலாம் எனவும், உயரம் 5’6” எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.