கொன்றுவிடுவதாக மிரட்டி வீடியோ எடுத்தனர்; துணை சபாநாயகர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

trichy Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Nov 09, 2026 01:30 PM GMT
Report

man accuse deputy speaker ravisankar threatened me as kill: என் குடும்பத்தை கொன்றுவிடுவதாக மிரட்டி வீடியோ எடுத்தனர் என துணை சபாநாயகரால் தாக்கப்பட்ட கார்த்திக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

துணை சபாநாயகர் தாக்குதல்

துறையூர் தவெக சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கரிடம், கடந்த ஒரு வார காலமாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை என்றும், குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளதாகவும் துறையூர் கண்ணபிரான் காலனியைச் சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர் முறையிட்டுள்ளார். 

கொன்றுவிடுவதாக மிரட்டி வீடியோ எடுத்தனர்; துணை சபாநாயகர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு | Man Accuse Deputy Speaker Ravisankar Threatened Me

அதில், ரவிசங்கர் கார்த்திக்குமாரை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, ரவிசங்கர் அருகே அமர்ந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்ட கார்த்திக்குமார், அதில் தன்னை தாக்கவில்லை எனவும், சமூகவலைத்தளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

கொன்றுவிடுவதாக மிரட்டி வீடியோ எடுத்தனர்; துணை சபாநாயகர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு | Man Accuse Deputy Speaker Ravisankar Threatened Me

கொன்றுவிடுவதாக மிரட்டி வீடியோ எடுத்தனர்

தற்போது மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கார்த்திக்குமார், நேற்று சமயபுரம் கோவிலுக்குச் சென்றபோது துணை சபாநாயகரின் வீட்டின் முன் வண்டி நின்றது. அவரைப் பார்த்து அவரிடம் கோரிக்கை தெரிவிக்கச் சென்றேன்.

அப்போது அங்கிருந்து இறங்கி வந்து எந்த விசாரணையும் இன்றி என்னை கைநீட்டி அடித்து, மிகவும் அசிங்கமாகவும் தரக்குறைவாகவும் பேசி என் கண்ணாடி, வண்டி சாவி எல்லாவற்றையும் பறித்துக்கொண்டனர்.

மணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் நான் சிகிச்சைக்காக சென்றிருந்த போது, அங்கு வந்த காவல் ஆய்வாளர் கிருபாநிதி என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, நான் யாரையோ அடித்தது போல் புகார் வந்திருப்பதாகக் கூறி, “உன்னை நான் ரிமாண்ட் செய்கிறேன்” என மிரட்டினார்.

என்னை வலுக்கட்டாயமாக துணை சபாநாயகர் வீட்டிற்கு அழைத்துச் சென்று உட்கார வைத்து மிரட்டினார்கள். “நாங்கள் சொல்வது போல் பேசவில்லை என்றால் உன் குடும்பத்தையும் கொன்றுவிடுவோம்; நான் சொன்னால் புஸ்ஸி ஆனந்த் என்ன வேண்டுமானாலும் செய்வார்” என்று மிரட்டினார்.

இதையடுத்து துணை சபாநாயகருடன் என்னை அமர வைத்து, அவர்கள் சொல்வது போல் பேச வைத்து 6, 7 டேக் வீடியோ எடுத்தார்கள். என் உயிருக்கு பயந்தும், என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் எழுதிக் கொடுத்ததை அப்படியே பேசினேன்" என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, துணை சபாநாயகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெகவினரே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US