அவன் மொத்தமாக மாறிவிட்டான்... கனடாவை உலுக்கிய இலங்கையர் குறித்து உறவினர் வெளிப்படை
கனடாவின் ஒட்டாவா பகுதியில் இலங்கையர் குடும்பத்தை மொத்தமாக கொலை செய்த இன்னொரு இலங்கை இளைஞர் தொடர்பில் உறவினர் ஒருவர் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
மிக மோசமான சம்பவமாக
ஒட்டாவா பகுதியின் சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான சம்பவமாக கருதப்படுகிறது ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் படுகொலை. இதில் தாயாரும் அவரது நான்கு பிஞ்சு பிள்ளைகளும் கொல்லப்பட்டுள்ளதுடன், இவர்களுடன் தங்கியிருந்த நண்பர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.
@ap
இந்த நபருக்கு மனைவியும் இரு பிள்ளைகளும் இலங்கையில் உள்ளனர். இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் தான் வாழ்க்கையில் திருப்பத்தை எதிர்பார்த்து கனடாவுக்கு வந்துள்ளார்.
இந்த கொலை வழக்கில் கைதாகியுள்ள Febrio De-Zoysa கனடாவுக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவர் மீது 6 முதல்நிலை கொலை வழக்குகளும் ஒரு கொலை முயற்சி வழக்கும் பதியப்பட்டுள்ளது.
De-Zoysa-வின் கொடூர தாக்குதலில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தனுஷ்க விக்கிரமசிங்க மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். உயிருக்கு ஆபத்தில்லை என்றே மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் De-Zoysa-வின் நெருங்கிய உறவினர் அனுஷா டி-சோய்சா தெரிவிக்கையில், தம்மால் இந்த கொடூரத்தை நம்பவே முடியவில்லை என்றும், தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்தினர் அருமையானர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தமது உறவினர் 2 ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவுக்கு வந்ததாக கூறும் அவர், அமைதியான, கல்வியில் ஈடுபாடுள்ள மாணவன் என்றும் தெரிவித்துள்ளார். கனடாவுக்கு வந்த முதல் மாதம் டி-சோய்சா தம்முடனே தங்கியிருந்ததாகவும்,
@ap
சமூக ஊடக கணக்கு உட்பட
அதன் பின்னர் உறவினர் சிலருடன் தங்கியிருந்த அவர் Algonquin கல்லூரியில் தனுஷ்க விக்கிரமசிங்க அறையில் தங்கியிருந்ததாகவும் அனுஷா தெரிவித்துள்ளார். தனுஷ்க விக்கிரமசிங்க தமது குடும்பத்துடன் வசிக்கத் தொடங்கிய பின்னர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் De-Zoysa அவர்களுடன் இணைந்துள்ளார்.
மட்டுமின்றி, சமீபத்தில் கனடாவில் உள்ள தனது உறவினர்களை தொடர்புகொள்ள De-Zoysa மறுத்ததுடன், அனைவரது தொடர்பு இலக்கங்கள், சமூக ஊடக கணக்கு உட்பட அமைத்தையும் முடக்கியுள்ளார்.
@ap
ஆனால் இப்படியான ஒருமுடிவுக்கு அவர் வருவார் என்று தாம் கனவிலும் எண்ணவில்லை என்று அனுஷா தெரிவித்துள்ளார். அவன் மொத்தமாக மாறிவிட்டான், என்னால் அதை நம்பவே முடியவில்லை என்றும் அனுஷா குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த மிருகத்தனமான தாக்குதலுக்கு பின்னணி என்ன என்பது தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என ஒட்டாவா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
@ap
சம்பவம் நடந்த குடியிருப்பானது இந்தியாவை சேர்ந்த ஒரு சீக்கியருக்கு சொந்தமான குடியிருப்பு என கூறப்படுகிறது. அந்த குடும்பத்திடம் தாம் வீட்டை ஒப்பந்தம் அடிப்படையில் அளித்திருந்ததாகவும், அங்கு யார் யார் தங்குகிறார்கள் என்பது தமக்கு தெரியாது என்றும் Harpreet Chhabra தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |