அவுஸ்திரேலியாவில் திடீரென பயணிகளை நோக்கி கூச்சலிட்ட நபர்! உடனடியாக தரையிறங்கிய விமானம்
அவுஸ்திரேலியாவில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த நபர் ஒருவர், பயணிகளை நோக்கி திடீரென கேள்வி எழுப்பியதால் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மலேசியன் ஏர்லைன்ஸ்
சிட்னியில் இருந்து கோலாலம்பூருக்கு MH122 Airbus-a330 எனும் விமானம் புறப்பட்டது. அப்போது பயணி ஒருவர் சக பயணிகளை நோக்கி 'நீங்கள் அல்லாஹ்வின் அடிமைகளா?' எனக் கேட்டு கூச்சலிட்டுள்ளார்.
அவரது இந்த செயல் பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து விமானக் குழுவினர் சந்தேகமடைந்து அவரது பையை ஆய்வு செய்தனர்.
ஆனால் அதில் ஆபத்தான எதுவும் இல்லை என தெரிந்தது. எனினும் பயணிகளின் பாதுகாப்பு கருதி, மாலை 4 மணிக்கு முன்னதாக விமானம் மீண்டும் சிட்னியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
@X/jawadmnazir
நபர் கைது
மேலும் விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் ஒன்றின் முடிவில் விமானம் தனிமைப்படுத்தப்பட்டது. அவசரகால வாகனங்கள் விமானத்தை சுற்றி வளைத்ததைத் தொடர்ந்து பயணிகள் இறங்கினர்.
சில பயணிகள் ஜெட் விமானத்தின் மற்றொரு பகுதிக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையில் முகமது என்று கூறிக்கொண்ட அச்சுறுத்தலை ஏற்படுத்திய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |