அடித்தே கொல்லப்பட்ட சிறுமி... சகோதரனின் பகீர் வாக்குமூலம்: வழக்கில் தப்பவைத்த குடும்பம்

Crime
By Arbin Jul 23, 2024 11:05 PM GMT
Report

பிரித்தானியாவில் சிறுமி ஒருவர் மரணமடைந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பமாக, சகோதரனே அடித்துக்கொன்ற விடயம் வெளிச்சத்துக்கு வந்தும் குடும்பத்தால் வழக்கில் இருந்து தப்பவைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலைக் குற்றச்சாட்டை 

மான்செஸ்டர் அருகே 11 வயதேயான பாடசாலை சிறுமி ஃபலாக் பாபர் என்பவர் குடியிருப்பில் சுருண்டு விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 3 வாரங்களுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

அடித்தே கொல்லப்பட்ட சிறுமி... சகோதரனின் பகீர் வாக்குமூலம்: வழக்கில் தப்பவைத்த குடும்பம் | Man Admitted Killed Sister Not Prosecuted

இந்த விவகாரத்தில், சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரர் சுஹைல் முகமது மீது அதிகாரிகள் கொலைக் குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஆனால் அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

சிறுமி ஃபலாக்கின் மரணம் சிக்கலான மருத்துவ காரணங்களால் நிகழ்ந்தது என்றே கூறப்பட்டது. சம்பவத்தன்று தமது இரு இளைய சகோதார்களுடன் குளியலறையில் இருந்துள்ளார் ஃபலாக்.

அப்போது முகமது உள்ளே நுழைய முயன்றுள்ளார். கொஞ்சம் பலமாகவே கதவை தள்ளித் திறந்ததாக கூறும் முகமது, அப்போது தலையில் காயங்களுடன் அலறியபடி ஃபலாக் சுருண்டு விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கதவு திறக்காததால் தாம் பலகொண்டு திறக்க முயன்றதில், அதன் ஒருபக்கம் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், முகமது தமது காதலிக்கு அனுப்பிய குறுந்தகவல்கள் நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குளியலறை கதவினை திறந்து

அதில் அவர், தாம் ஃபலாக்கை கொலை செய்துள்ளதாகவும், அவளின் தலையில் தாம் குத்துவிட்டதாகவும், ஆனால் என்ன நடந்தது என்பது தமக்கு நினைவில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஃபலாக் அலறியபடி சுருண்டு விழுந்ததாகவும், சுயநினைவின்றி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் முகமது தமது காதலிக்கு அனுப்பிய குறுந்தகவலில் குறிப்பிட்டுள்ளார்.

அடித்தே கொல்லப்பட்ட சிறுமி... சகோதரனின் பகீர் வாக்குமூலம்: வழக்கில் தப்பவைத்த குடும்பம் | Man Admitted Killed Sister Not Prosecuted

ஆனால், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது தொடர்பில் அளித்த வாக்குமூலத்தில், குளியலறை கதவினை திறந்து பார்த்த போது ஃபலாக் தரையில் விழுந்து கிடந்துள்ளார் என்றும், தாம் உதவ முன்வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

மட்டுமின்றி, குளியலறை கதவானது திறக்க முடியாமல் சிக்கிக்கொள்ள, தாம் பலத்துடன் தள்ளியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், 999 இலக்கத்திற்கு தொடர்புகொண்ட முகமது, தமது சகோதரி தடுமாறி விழுந்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

அந்த உரையாடலை ஆய்வு செய்த அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்களை கடவுளிடம் வேண்டுங்கள் என முகமது கூறுவதும் பதிவாகியிருந்தது. அத்துடன், யாருக்கும் என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டாம், யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டாம் என்றும் முகமது தமது குடும்ப உறுப்பினர்களிடம் கூறுவதும் அந்த அலைபேசி அழைப்பில் பதிவாகியிருந்தது.

2022 பிப்ரவரி மாதம் நடந்த இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்தனர். மார்ச் 18ம் திகதி ஃபலாக் மரணமடைந்த நிலையில் முக்மது கைது செய்யப்பட்டார். ஆனால் விசாரணையில் அவர் ஒரு வார்த்தை கூட பதிலளிக்கவில்லை.

சம்பவத்தின் போது ஃபலாக்குடன் இருந்த இரு இளைய சகோதரர்களும் குடும்பத்தினரின் கட்டாயம் காரணமாக பொலிசாரிடம் பேச மறுத்துள்ளனர். இந்த நிலையில், ஃபலாக்கின் பாட்டியார் பொலிசாரிடம் தெரிவிக்கையில், கதவில் அல்லது ஃபலாக்கின் தலையில் முகமது குத்துவிட்டிருக்கலாம் என்றே குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தமக்கு என்ன நடந்தது என்பது குறித்து எதுவும் நினைவில் இல்லை என தெரிவித்துள்ளார். 2022 மார்ச் 18ம் திகதி மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு சிறுமி ஃபலாக் மரணமடைந்திருந்தார். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, குருமன்காடு

13 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Atchuvely, கொழும்பு

16 Jan, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Chennai, India, London, United Kingdom

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Rugby, United Kingdom, Ealing, United Kingdom

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Herne, Germany

12 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US