பிரித்தானியாவில் இளம் பெண்ணுக்கு எதிராக நடந்த இனவெறி வன்முறை: 32 வயதுடைய நபர் கைது
பிரித்தானியாவின் வால்சலில்(Walsall) இனவெறி தாக்குதலுடன் தொடர்புடைய பாலியல் துஷ்பிரயோக வழக்கில் 32 வயது நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணுக்கு நடந்த கொடுமை
பிரித்தானியாவின் வால்சலில்(Walsall) பகுதியில் உள்ள பார்க் ஹாலில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சனிக்கிழமை இரவு 7:15 மணியளவில் பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பெண்ணை கண்டுபிடித்து அவசர உதவிக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் தனக்கு தெரியாத நபர் ஒருவரால் தாக்கப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய நிலையில் பொலிஸார் இதனை இனவெறித் தாக்குதலாக கருதி விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் திங்கட்கிழமை பெர்ரி பார்(Perry Barr) பகுதியில் 32 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கைக்கு உறுதுணையாக இருந்த பொதுமக்களுக்கு வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல் துறையின் துப்பறியும் அதிகாரி ரோனன் டைரர் நன்றியை தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |