பிரித்தானியாவில் பள்ளத்தில் விழுந்த ஆடம்பர கார்: 19 வயது பெண் உயிரிழப்பு..இளைஞர் கைது
Man arrested for beautician died in uk: பிரித்தானியாவில் 19 வயது அழகுக்கலை நிபுணர் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பிரித்தானியாவில் மெர்சிடிஸ் கார் பள்ளத்தில் கவிழ்ந்து, 19 வயது அழகுக்கலை நிபுணர் பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இளைஞர் ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பள்ளத்தில் விழுந்த மெர்சிடிஸ் கார்
எசெக்ஸின் பாஸில்டனுக்கு அருகிலுள்ள கிரேஸ் ஹில், ஓக் சாலையில் மெர்சிடிஸ் கார் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.

இதில் 19 வயது பெண்ணான கெல்சி ஸ்டீவன்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் ஒரு அழகுக்கலை நிபுணர் என்று பின்னர் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினரின் விசாரணைக்கு பின் ஜானி ஸ்மித் என்ற 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இளைஞர் கைது
ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கி மரணத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கெல்சியின் மரணத்திற்கான காரணம், அவர் தண்ணீரில் மூழ்கி வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கெல்சியின் குடும்பத்தினர் தங்களது நினைவு அஞ்சலியில், "அன்புக்குரிய மகள், சகோதரி, பேத்தி மற்றும் தன்னை அறிந்த அனைவருக்கும் கெல்சி தோழியாக இருந்தார்" என குறிப்பிட்டனர்.
