சுவிஸ் விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டவர்கள்: அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா விமான நிலையத்தில், தாய்லாந்து நாட்டிலிருந்து வந்த இருவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டார்கள். அப்போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
சுங்கச் சோதனையில் சிக்கிய நபர்கள்
கடந்த புதன்கிழமை, ஜெனீவா விமான நிலையத்தில் அதிகாரிகள் சுங்கச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, தாய்லாந்திலிருந்து வந்த ஸ்பெயின் நாட்டவர் ஒருவரின் சூட்கேஸ்களை சோதனையிட்டார்கள்.
அந்த 31 வயது நபர், தனது இரண்டு சூட்கேஸ்களில் 53 கிலோ கஞ்சா என்னும் போதைப்பொருளை மறைத்துவைத்திருந்தது சோதனையில் தெரியவந்தது.
சற்று நேரத்துக்குப் பின், அந்த ஸ்பெயின் நாட்டவர் பயணித்த அதே விமானத்தில் பயணித்த பிரான்ஸ் நாட்டவர் ஒருவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டார்கள்.
அப்போது, அந்த 59 வயது நபர் தனது இரண்டு சூட்கேஸ்களிலும் 53 கிலோ கஞ்சா போதைப்பொருளை மறைத்துவைத்திருந்தது சோதனையில் தெரியவந்தது.
அந்த இருவரையும் கைது செய்துள்ள அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |