வாட்ஸ்அப்பில் வந்த லிங்கை கிளிக் செய்ததால் பல லட்சங்களை இழந்த கனேடிய பெண்! எச்சரிக்கை செய்தி
இந்தியாவில் இருந்து கொண்டு கனேடிய பெண்ணை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை பறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவை சேர்ந்தவர் இசாவுதீன் அகமது. இவருக்கு கனேடிய பெண்ணுடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அப்பெண்ணின் கணினியில் உள்ள தொழில்நுட்ப கோளாறை தான் தீர்க்க உதவுவதாக அகமது தெரிவித்திருக்கிறார்.
அதன்படி மிரர் செயலி லிங்கை அப்பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அகமது அனுப்பினார். அதை அவர் கிளிக் செய்த போது அந்த பெண்ணின் சாதனத்தின் கட்டுப்பாட்டைப் பெற்றார் அகமது.
fbi.gov
இறுதியில் அவரது வங்கிக் கணக்குகளில் இருந்து கிட்டத்தட்ட ரூ. 93,81,280.91 (இலங்கை மதிப்பில்) எடுத்து பெரிய மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்.
இதையடுத்து இந்த புகாரின் பேரில் வெளியுறவு அமைச்சகம் துரிதமாக செயல்பட்டதையடுத்து பொலிசார் விசாரணையை தொடங்கினர்.
பின்னர் மோசடி பேர்வழி அகமது கைது செய்யப்பட்டுள்ளார்.