மனைவியின் பட்டமளிப்பு விழாவுக்காக பிரித்தானியா வந்த நபர் கைது: பின்னணி
மனைவி பட்டம் பெறுவதைக் காண்பதற்காக பிரித்தானியா வந்தார் ஒரு கணவர். ஆனால், அவர் தன் மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளவேயில்லை.
பட்டமளிப்பு விழாவுக்காக பிரித்தானியா வந்த நபர் கைது
கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் மான்செஸ்டர் விமான நிலையம் வந்திறங்கினார் Anas Bahbaishi (33). அவருக்காக விமான நிலையத்தில் தயாராக காத்திருந்த பொலிசார் அவரைக் கைது செய்தார்கள்.
தன் மனைவியின் பட்டமளிப்பு விழாவைக் காண வந்த அவரை பொலிசார் கைது செய்து நாட்டிங்காம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
NOTTINGHAMSHIRE POLICE
என்ன காரணம்?
நாட்டிங்காமில் வாழ்ந்துவந்த Anas, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் திகதி, வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டதை மீறி வாகனம் ஓட்டியபோது பொலிசில் சிக்கினார்.
அவருக்கு 200 பவுண்டுகள் அபராதமும், 12 மாதம் வாகனம் ஓட்ட தடையும், பிற கட்டணங்களாக 160 பவுண்டுகளும் செலுத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் சவுதி அரேபியாவுக்கு தப்பி ஓடிவிட்டார்.
PA
இதற்கிடையில், தன் மனைவியின் பட்டமளிப்பு விழாவுக்கு வருவதற்காக அவர் மான்செஸ்டருக்கு விமானம் ஏறிய விடயம் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மூலம் பொலிசாருக்கு தெரியவந்தது.
Anas விமான நிலையம் வந்து இறங்கியதும், அவரை பொலிசார் கைது செய்ய, திகைத்துப்போனார் அவர். கடைசிவரை அவரால் தன் மனைவியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க முடியாமலே போனதுதான் சோகம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |