கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: சமீபத்திய தகவல்
கடந்த மாதம் கனடாவின் ரொரன்றோ பல்கலை வளாகத்தில் இந்திய இளைஞர் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவர்
கடந்த மாதம் 23ஆம் திகதி மதியம் 3.30 மணியளவில், ரொரன்றோ பல்கலை வளாகத்தில் ஷிவாங்க் அவஸ்தி (20)என்னும் இந்திய மாணவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவஸ்தி கொலை தொடர்பில், Babatunde Afuwape (23) என்னும் நபரை கைது செய்துள்ளதாக கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

Babatunde, ஏற்கனவே ஆயுதம் வைத்திருந்தது தொடர்பான குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டிருந்துள்ளார்.
இந்நிலையில், அவஸ்தியின் மரணத்தைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் 28ஆம் திகதி, மீண்டும் Babatunde கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார், அவருக்கும் அவஸ்திக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்ததாகத் தெரியவில்லை என தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |