தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு ரயில் வரும்போது ரீல்ஸ் எடுத்தவர் கைது
ரயில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு ரயில் வரும் நேரத்தில் செல்போனில் ரீல்ஸ் எடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரீல்ஸ் எடுத்தவர் கைது
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், உன்னாவ் மாவட்டம் ஹசன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் சவுராசியா. இவர் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போடுவதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பார்.
இந்நிலையில், குஸும்பி ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் உள்ள ரயில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு ரயில் வரும் நேரத்தில் செல்போனில் ரீல்ஸ் எடுத்துள்ளார்.
ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்த இவர், சிறிது தவறினாலும் உயிரிழக்க வாய்ப்பு அதிகம் இருந்தது. இதையடுத்து தான் எடுத்த வீடியோவை, சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்.
பின்னர், இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ரயில்வே பொலிசாரின் கவனத்திற்கு சென்றது. இதனால் ரஞ்சித் சவுராசியா மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |