காதலை ஏற்க மறுத்த இளம்பெண்: இளைஞர் செய்த பயங்கர செயல்
தன் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்து கிடந்த இளம்பெண்
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள Kolhuva என்னுமிடத்தைச் சேர்ந்த ஜோதி என்னும் இளம்பெண் ஞாயிற்றுக்கிழமையன்று தன் வீட்டில் உயிரிழந்துகிடந்தார்.
அவரது கழுத்திலும் கைகளிலும் இரத்தக்குழாய்கள் வெட்டப்பட்டிருந்தன.
வழக்குப் பதிவு செய்த பொலிசார் கொலையாளியைத் தேடிவந்த நிலையில், CCTV காட்சிகள் முதலான பல்வேறு ஆதாரங்கள் அடிப்படையில், சுரேந்திர சிங் பட்டேல் என்பவர் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் பட்டேலைக் கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொள்ள, ஜோதியைக் கொலை செய்தது தான்தான் என பட்டேல் ஒப்புக்கொண்டார்.
தான் ஜோதியைக் காதலித்துவந்ததாகவும், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியும் ஜோதி தொடர்ந்து தன் கோரிக்கைகளை நிராகரித்ததாகவும் தெரிவித்துள்ளார் பட்டேல்.
ஆகவே, ஜோதியின் கழுத்திலும், கைகளிலும் உள்ள இரத்தக்குழாய்களை வெட்டி தான் அவரைக் கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் பட்டேல்.
இதற்கிடையில், இன்று காலை சம்பவ இடத்துக்கு பட்டேலை பொலிசார் அழைத்துச் செல்ல, தான் அங்கு மறைத்துவைத்திருந்த ஒரு பையை எடுத்துள்ளார் பட்டேல்.
அதற்குள் ஒரு நாட்டுத் துப்பாக்கி இருக்க, திடீரென துப்பாக்கியால் பொலிசாரை நோக்கிச் சுட்டுள்ளார் பட்டேல்.
பொலிசார் திருப்பிச் சுட்டதில் பட்டேலின் காலில் காயம் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |